உலக நாடுகளை வியக்க வைத்த சீனா..!

0

உலகின் முழு நாடுகளையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தடுப்பு மருந்துகளின் தரத்தை மேம்படுத்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

அமெரிக்கவின் தடுப்பு மருந்துகளான பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்தில் இருந்து ரஸ்யாவின் தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை அனைத்தும் உருமாறிவரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏற்ப விஞ்ஞான வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில் சீனா பல நாடுகளை வியக்கச் செய்யும் வகையில் நாசி துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஓர் புதிய திரவநிலை தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. வலி நிவாரண ஸ்பிரே போன்று இதனை நாசி துவாரத்தில் அனைவரும் அடித்துக் கொள்ளலாம்.

இந்த திரவ தடுப்பு மருந்தை சுவாசிப்பதன் மூலமாக அது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை நுரையீரலில் குறைக்கிறது. எட்டரை கோடி தடுப்பு மருந்துகள் சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் தற்போது விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த தடுப்பு மருந்து ஸ்பிரே அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இந்த திரவநிலை தடுப்பு மருந்து தற்போது சோதனை நிலையிலேயே உள்ளது. பரிசோதனையின் பின் இதனை பொது மக்களுக்கு கொடுக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here