உலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடின்…

0

ரஷ்ய நாணயத்தில் எரிவாயு கொள்வனவு செய்வது தொடர்பாக உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி நேற்றைய தினம் 31ஆம் திகதி மார்ச் மாதம் 2022 புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை இன்று 1 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2022 முதல் இது அமலுக்கு வருகிறது.

இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புடின் குறிப்பிடுகையில், “யாரும் எங்களுக்கு இலவசமாக தரவில்லை.

நாங்கள் தொண்டு செய்யவும் போவதில்லை. எனவே ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என கூறியுள்ளார்.

ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் எரிவாயுவை பெரிய அளவில் நம்பி உள்ளன என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here