உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு

0

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அதனால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

குளிர் காலத்தில் ஆபத்து காரணிகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் 15,000 பேர்கள் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus, கொரோனா வைரஸ் பரவலால் அயர்ந்துவிட்டோம்.

பெருந்தொற்று காலம் நீண்டுகொண்டே செல்கின்றது.

ஆனால் வைரஸ் சோர்வடையவில்லை.

அதனால், நாம் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். .

இதனால் தொற்று மேலும் உக்கிரமாக பரவ வாய்ப்புள்ளது.

மட்டுமின்றி எதிர்வரும் மாதங்களில் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here