உலக நாடுகளை குரங்கு காய்ச்சல் அச்சுறுத்த கூடிய அபாயம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி நிலவரப்படி, உலகத்தில் 12 நாடுகளில் மொத்தம் 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
28 பேருக்கு அந்நோய் இருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜெனீவா நகரில் ஐ.நா.வின் உலக சுகாதார மாநாடு நடந்து வருகிறது.
அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் (Dr.Tedros Adhanom Ghebreyesus) பேசியதாவது,
உலகில் கொரோனா மட்டும் பிரச்சினை இல்லை.
குரங்கு காய்ச்சல், உக்ரைன் போர், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் ஆகியவை வலிமையான சவால்களாக உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.