ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்றுள்ளது.
அதில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
எட்டாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் கருப்பு நிறக் காய்களுடன் அற்புதமாக விளையாடி 39 நகர்த்தல்களில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில், பிரக்ஞானந்தாவுக்கு . வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த 16 வயதில் அனுபவம் மிக்க, கொண்டாடப்படும் கார்ல்சனை அதுவும் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடி தோற்கடிப்பது என்பது மகத்தானது.
செஸ் விளையாட்டில் சாதிக்க வாழ்த்துகள்.
இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார்.