உலக சாதனையை முறியடித்த 11 வயது பிரித்தானிய சிறுவன்….!

0

பிரித்தானியாவில் கென்ட் பகுதியைச் சேர்ந்த கால்ம் பெட்டிட் (Callum Pettit) எனும் 11 வயது சிறுவன், 96 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 44 கிலோ) எடையுள்ள கெண்டை மீனை பிரான்சின் Reims பகுதிக்கு அருகில் உள்ள ஏரியில் பிடித்துள்ளார்.

அதாவது தன்னைவிட மிக அதிக எடைகொண்ட மீனை மிதித்து சாதித்துள்ளான்.

இது ஜூனியர் ஆங்லர் மீன்பிடி போட்டியில் மிகப்பெரிய மீனை பிடிப்பதில் புதிய சாதனையாகும்.

சிறுவன் கேலம் பெட்டிட் சிறுவயதிலிருந்தே தன் தந்தையுடன் மீன்பிடித்து வருகிறான்.

அவன் இதற்கு முன் அதிகபட்சமாக 29-பவுண்டு எடையுள்ள மிரர் கார்ப் மீனை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

96 பவுண்டு கொண்ட இந்த சாதனை மீனைப் பிடிக்க அவருக்கு 23 நிமிடங்கள் ஆனது.

மீன் தூண்டிலில் மாட்டியதும் தனது தந்தை ஸ்டூவர்ட்டுடன் உதவியுடன் மீனை பிடித்துள்ளார்.

இந்த மாபெரும் கேட்ச், 96 பவுண்டுகள் 10 அவுன்ஸ் எடையும், கேலமை விட சில பவுண்டுகள் மட்டுமே இலகுவாகவும் இருந்தது.

‘Big Girl’ என்று அந்த மீனுக்கு செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்த மீன், கேலமின் தனித்துவமான banoffee சுவை கொண்ட தூண்டிலில் கிடைத்தது.

இது ஐரோப்பாவின் மிகப்பெரிய கெண்டை மீன்களில் ஒன்று என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here