நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் குவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2018 ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்திருந்தது.
இங்கிலாந்து அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய ஜோஸ் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணியில் பட்லரைத் தவிர பில் சால்ட் (122), டேவிட் மலோன் (125) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.