உலக சாதனையில் இடம் பெற்ற மின்னல் பதிவு…! எங்கு தெரியுமா…?

0

அமெரிக்காவில் 2020 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவான மின்னல், உலகின் மிக நீளமான மின்னல் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

சுமார் 770 கிலோமீட்டர் நீளம் வரை இந்த மின்னல் தென்பட்டுள்ளது.

தெற்கு அமெரிக்காவில் 2020 ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி அன்று Mississippi, Louisiana மற்றும் Texas ஆகிய பகுதிகளில் மேற்பரப்பில் தோன்றியுள்ளது.

இந்த மின்னல் சுமார் 768 கிலோமீட்டர் அல்லது 477.2 மைல்கள் தூரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைவானது அமெரிக்காவில் உள்ள New York City முதல் Columbus வரை அல்லது லண்டன் முதல் ஜெர்மனின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தொலைவை உள்ளடக்கியது.

இந்த புதிய சாதனைக்கு முன்பாக அக்டோபர் 31, 2018 ஆம் ஆண்டு தெற்கு பிரேசிலில் பகுதியில் தோன்றிய bolt zig-zag என்ற மின்னலை விட 60 கிலோமீட்டர் கூடுதலாக பரவியுள்ளமை குறிப்பிடத்தக்து.

இதனை உலக வானிலை நிறுவனத்தின் வானிலை ஆய்வாளர்கள் மற்றும் வானிலை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து உலக வானிலை மற்றும் காலநிலை மையத்தின் தகவல்தொடர்பாளர் Randall Cerveny தெரிவிக்கையில்,

ஒரேநேரத்தில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட மின்னல் என குறிப்பிட்டார்.

மேலும் இத்தகைய இயற்கையின் உட்சநிலைகளின் அளவீடுகள் என்பது நமது வானிலை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here