உலகை அச்சுறுத்தும் கொரோனா… எச்சரிக்கும் WHO

0

கொரோனாவை தொடர்ந்து கொரோனா வைரஸின் மாறுபாடான Omicron தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இந்த தொற்று உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுதிதி வருகின்றது.

இந்நிலையில் Omicron வைரஸ் புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்று ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்வுட், தற்போது உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வரும் Omicron தொற்று விரைவில் அதிகரித்து பெரிய ஆபத்தினை உண்டாக்கும்.

Omicron வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மேற்கு ஐரோப்பாவில் நோய்த்தொற்று விகிதங்களில் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில், பிரான்சில் புதிய கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்டு தற்காலிகமாக அதற்கு IHU என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here