முடிவுக்கு வரும் கொரோனா? வெளியானது மகிழ்ச்சியான தகவல்

0

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இன் தாக்கம் முடிவுக்கு வருகிறதாக பிரபல நிபுணர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா  தொற்றுநோயியல் நிபுணரான விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் என்பவரே  இந்த தகவலை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் கொரோனா குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தைத் தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும்.

அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும்.

எனவே அனைவ ருக்கும் தடுப்பூசி செலுத்தப்ப டுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பானது உலக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியினர் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here