உலகில் மிக குள்ளமான பசு!! -பார்க்க படையெடுக்கும் மக்கள் கூட்டம்-

0

வங்காள தேச நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள கிராமத்தில் உள்ள பண்ணையில் ராணி என்று பெயர் கொண்ட விசித்திரமான பசு ஒன்று உள்ளது.

அந்த பசு 51 சென்டிமீட்டர் நீளம், 26 கிலோகிராம் எடையுள்ளது. இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்டிமீட்டர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here