உலகில் கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்திய நாடு….?

0
Researcher looking on blood sample in test tube. Focus on test tube.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 15.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள மக்கள் தொகையில் 72.1% பேர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக சீஷெல்ஸ் நாட்டில் 71.7% பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தை பொறுத்தமட்டில் சனிக்கிழமை மட்டும் புதிதாக 1,632 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 பேர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மொத்தமுள்ள 7 மாகாணங்களிலும் சேர்த்து, 58.3 மில்லியன் கொரோனா சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் அவசர பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசிக்கு ஐக்கிய அமீரகம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே, ஐக்கிய அமீரகத்தில் ஆஸ்ட்ராசெனகா, பைசர் உள்ளிட்ட நான்கு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தடுப்பூசிகளை மக்கள் தெரிவு செய்யலாம் என்பது மட்டுமின்றி, அரசு சார்பில் இலவசமாகவே அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலக நாடுகளில் மிக அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here