உலகிலேயே மிகப்பெரிய பொக்கிஷம் இலங்கையில் கண்டுபிடிப்பு..!

0

உலகின் மிகப்பெரிய நட்சத்திர கல் ஒன்று கிணறு தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிணறு தோண்டிய தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு மாணிக்க வர்த்தகர் கூறினார்.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீலகல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 million கரம் எடையைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு “Serendipity Sapphire”என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிணற்றை தோண்டிக் கொண்டிருந்த சிலர் அரிய வகை கற்கள் தொடர்பில் தன்னிடம் தெளிவுப்படுத்தியதாக கல்லின் உரிமையாளரான கமகே என்பவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய கல்லை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இது சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என புகழ்பெற்ற இரத்தினகல் ஆய்வாளர் காமினி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here