உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை 13 மாத போராட்டத்துக்குப் பின் வீடு திரும்பியது

0

சிங்கப்பூரில் பிறகும் வெறும் 212 கிராம் மட்டுமே எடை இருந்த குழந்தை பிழைப்பது அரிது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் குவெக்வி லியாங் மற்றும் வாங்மிலிங். இரண்டாவது முறையாக வாங்கிமிலிங் கர்ப்பமுற்ற போது அவருக்கு வித்தியாசமான ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் சிறுநீரில் அளவுக்கு அதிகமாக புரதம் வெளியேறியுள்ளது. இதனால் அவருக்கு ஆறாவது மாதத்திலேயே குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தை வெறும் 212 கிராம் மட்டுமே இருந்துள்ளது. உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக இந்த குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பிறப்பது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் 13 மாத காலம் உயிர்காக்கும் கருவிக்குள் வைக்கப்பட்ட குழந்தை இப்போது வீடு திரும்பியுள்ளது. இப்போது குழந்தை 6 கிலோ இருந்தாலும் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதால் வெண்டிலேட்டர் வசதியுடன் சுவாசித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here