உலகின் முதல் முறையாக கார்னிவாக்-கோவ் எனும் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் விவசாய கண்காணிப்புக் குழு ரோசல்கோஸ்னாட்ஸர் இதனை அறிவித்துள்ளது.
17,000 டோஸின் முதல் தொகுதி ரோசல்கோஸ்னாட்ஸரின் துணை நிறுவனமான ஃபெடரல் சென்டர் ஆஃப் அனிமல் ஹெல்த் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கண்காணிப்புக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்கு அதிக உள்நாட்டு தேவை உள்ளது மற்றும் முதல் தொகுதி அளவு நாட்டிற்குள் விநியோகிக்கப்படும் என்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளன என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி திறன் இப்போது மாதத்திற்கு 3 மில்லியன் டோஸ் ஆக உள்ளது.