உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதற்காக 149 நாடுகள் கணக்கெடுப்பில் எடுத்து கொள்ளப்பட்டன.
10 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்த பட்டியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, சுகாதார வாழ்க்கை, சொந்த வாழ்வை முடிவு செய்யும் சுதந்திரம், மொத்த மக்கள் தொகை மற்றும் ஊழல் அளவு ஆகியவை அளவுகோல்களாக கொள்ளப்பட்டு முடிவு செய்யப்படுகிறது.
மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இதில் கடந்த 2021ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 7 மகிழ்ச்சியான நாடுகள் அனைத்தும் வட ஐரோப்பிய நாடுகளாகும்.
இவற்றில், 55.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட பின்லாந்து 7.842 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து டென்மார்க் (7.620), சுவிட்சர்லாந்து (7.571), ஐஸ்லாந்து (7.554), நெதர்லாந்து (7.464), நோர்வே (7.392), மற்றும் ஸ்வீடன் (7.363) ஆகியவை உள்ளன.
இந்த பட்டியலில், அமெரிக்கா 16ஆவது இடத்திலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் முறையே 15ஆவது மற்றும் 20ஆவது இடத்திலும் உள்ளன.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், இலங்கை 4.3 புள்ளிகளுடன் 127ஆவது இடத்தில் உள்ளது.
இதேபோன்று இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 136ஆவது இடம் கிடைத்து உள்ளது.