உலகின் அதிசய தீவில் முதன்முதலில் பரவியது கொரோனா!

0

தொங்கா தீவு நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தொங்கா நாட்டின் பிரதமர் பொஹிவ து’இ’ஒனெடோவா (Pohiva Tu’i’onetoa), தொங்கபது என்கிற முக்கிய தீவில் உள்ளவர்கள் அடுத்த வாரம் ஊரடங்கை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத சில அதிசய நாடுகளில் தொங்காவும் ஒன்றாக இருந்தது.

இந்த தீவு நாடு, நியூசிலாந்துக்கு வட கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தொங்கா தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here