உலகளவில் மதிப்பை பெற்ற இலங்கையர்கள்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்தமைக்கு நேற்றைய தினம் இலங்கை அணி ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சள் ஆடை அணிந்து, நேற்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்றிருந்தனர்.

அத்துடன் நன்றி தெரிவிக்கும் சுலோகங்களை ஏந்தி இலங்கையர்கள் வௌிக்காட்டிய நன்றியுணர்வு சர்வதேசத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கை மக்களின் நன்றியுணர்வை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேசத்துடன் இணைந்து செல்ல நாம் மேற்கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்காக இது உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உள்நாட்டில் சக இனங்களுடன் சேர்ந்து வாழ முயற்சித்தோமானால் சர்வதேச உதவிகள், உள்நாட்டின் ஒற்றுமை என்பன ஒன்றிணைந்து நம் நாட்டை விரைவில் மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் என இலங்கையர்கள் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here