உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன்! பாராளுமன்றத்தில் அமளிதுமளி

0

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேசிய தேர்ல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு எதிராக ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்ததன் பின்னர் சபையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வௌியிட்டமையால் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here