உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் அபாயம்! ஆய்வு தகவல்

0

பிரித்தானியாவின் பிர்மிங்ஹாம் பல்கலையில், வைரஸ் ஆய்வு துறை மூத்த பேராசிரியராக னியா ஸ்டமடாக்கி பணியாற்றி வருகிறார்.

இவர், இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பற்றி தெரிவிக்கையில்

பொதுவாக நம் உடலில் ஊடுருவும் வைரஸ் அணுக்கள், செல்களில் நுழைந்து,பல் மடங்கு பல்கி பெருகும். அதன்பின், செல்களை பிளந்து வெளியேறி, இதர செல்களுடன் இணைந்து, மீண்டும் பெருக்கத்தில் ஈடுபடும்.

இதனால் நோய் பாதிப்பு தீவிரமாகிறது.

இதை சமாளிக்க, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு தடுப்பூசி, வீரிய மருந்துகள் ஆகியவை வாயிலாக உடலில், நோய் எதிர்ப்பு திறன் செல்கள் உருவாக்கப்படுகின்றன.

வலிமையான இந்த செல்கள், வைரஸ் செல்களுடன் இணைந்து, உடலில் புதிய வைரஸ் நுழைவதை தடுக்கின்றன.

ஆனால், உருமாறிய கொரோனா நோய் எதிர்ப்பு திறன் அணுக்களையும் ஏமாற்றும் வலிமை உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

உடல் செல்களில் புகும் கொரோனா வைரஸ் அணுக்கள், பல்கி பெருகி, பிளக்காமல், பிற செல்களுடன் இணைந்து, சின்சிடியா என்ற, சூப்பர் செல் ஆக மாறுகிறது.

பேட்டா வைரஸ் இது போன்ற சூப்பர் செல் தொழிற்சாலைகள், நோய் எதிர்ப்பு திறன் செல்களை ஏமாற்றி, வைரஸ்களை வேகமாக உற்பத்தி செய்கின்றன.

ஆப்ரிக்க சுகாதார ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த அலெக்ஸ் சிகல் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்த போது, பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்பா வைரஸ், உடலின் நோய் எதிர்ப்பு திறன் செல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதும்,

ஆப்ரிக்காவில் உருவான, பேட்டா வைரசில் தாக்கம் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் உடலில் புகுந்து, பிற செல்களுடன் பெருகும் வைரசை முழுக்க ஒழிப்பது கடினமான காரியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் மற்றும் விலங்குகளுடன் வைரஸ்கள் வாழ்ந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here