உயிர்த்த ஞாயிறு அன்று பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுக்கோள்

0

உயிர்த்த ஞாயிறு அன்று பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுக்கோள்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு இணையாக காவற்துறையினரால் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவ தலைமையகம் சகல பாதுகாப்பு கட்டளை தளபதிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தத்தமது அதிகார பிரதேசங்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய ஆய்வுகளை நடாத்தி காவற்துறையினருடன் இணைந்து ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்து அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள கத்தோலிக தேவாலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here