உயிரிழந்த சிறுமியின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற தந்தையின் அவலம்..

0

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தரில் 11 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக ஜலந்தரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் அவரை அம்ரிஸ்டரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிறுமிக்கு அங்குள்ள அறுவைசிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியின் உடல் கொண்டு வரப்பட்டது.

ஆனால் சிறுமியின் உடல் முழுவதும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மூடி இருந்த நிலையில் உறவினர்கள், மக்கள் சிறுமிக்கு தொற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்ததாக எண்ணி பயத்தில் யாரும் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை.

இந்நிலையில் தந்தை இறுதியில தன்னுடைய 11 வயது மகளை தன்னுடைய தோளில் சுமந்தபடியே சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று தன்னுடைய மகளுக்கான இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பதினொரு வயது சிறுமி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை என காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here