உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டிய கணவர்

0

இந்தியாவில், கொரோனா தொற்றுநோயால் இறந்த தனது மனைவிக்கு கோவில் கட்டிய அவரது கணவர், தினமும் பூஜை செய்து வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண சிங் ரத்தோர். இவரது மனைவி கீதா பாய். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போது அவரது மனைவி கீதா பாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மனைவியின் திடீர் பிரிவை ஏற்க முடியாமல் நாராயண சிங் ரத்தோர் தவித்து வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவியின் உருவிலான சிலை ஒன்றை வடிவமைத்து கோவில் ஒன்றை கட்டி தினந்தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

கோவில் கட்டியதால் தன்னை சுற்றி எப்பவும் கீதா பாய் இருப்பது போல உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த உலகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மத்தியில் இந்த தம்பதி ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here