உயிரியல் பூங்காவிற்கு சென்ற இரு பெண்களுக்கு ஏற்பட்ட கதி…

0

தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம், Natasha Vrany (39) என்ற பெண்ணும், அவரது உறவினரான Belinda Newman (62) என்ற பெண்ணும் நீர்யானை காட்சியகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள்.

அங்கு நீர்யானைகளுக்கு உணவளிக்கவும், அவற்றைத் தொட்டுப்பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில், Natashaவும் Belindaவும் நீர்யானைகளைக் காண்பதற்கான இடத்தில் அமர்ந்திருக்க, திடீரென ஒரு நீர்யானை Natasha மீது பாய்ந்து, அவரைத் தூக்கி வீசி பந்தாடி, அவரது கால்கள் இரண்டையும் கவ்விக்கொண்டுள்ளது.

இதைக் கண்ட Belinda, அந்த நீர்யானையிடமிருந்து Natashaவைக் காப்பாற்ற முயல, Natashaவை விட்டுவிட்டு Belinda மீது பாய்ந்திருக்கிறது அந்த நீர்யானை.

Belindaவை முட்டி மோதி அவரது வயிற்றைக் கிழிக்க, அந்த காப்பகத்தின் உரிமையாளர் வந்து அவர்களை காப்பாற்றியிருக்கிறார்.

மயக்கமடைந்த Natasha கண் விழித்துப் பார்க்கும்போது, Belindaவின் வயிறு கிழிந்து, குடல்களை தன் கையால் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டுள்ளார்.

பின்னர் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் இருவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here