உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்…!

0

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக பாடத்திட்டங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் நிறைவு செய்வது சவாலானது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here