உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

0

குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மொனராகல, புத்தள கட்டுகஹகல்கே குளத்தில் நண்பர்கள் மூவர் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குளத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கி 3 இளைஞர் உயிரிழந்துள்ளனர். இன்று (15) காலை மூவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்த மூவரும் மொனராகலை- மஹாநாம தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் நண்பர் வீட்டுக்குச் செல்வதாகத் தெரிவித்து, 2 மோட்டார் சைக்கிள்களில் வீட்டிலிருந்து சென்றுள்ளதுடன், மாலையாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் புத்தல பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து. கட்டுகஹல்ல குளத்துக்கருகில் மோட்டார் சைக்கில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸார், குளத்தில் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போதே, மூன்று இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு இன்று பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here