உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்!

0

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் பரீட்சையானது மார்ச் 5-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 29 மருத்துவமனைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்தகைய மருத்துவமனைகளின் பட்டியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தலில் இருக்கும் பரீட்சார்த்திகள் தங்களுடைய அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்குச் சென்று தனிமைப்படுத்தலில் இருப்பதை சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.

பின்னர், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட தேர்வு மையத்தில் பரீட்சை எழுத வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலதிக தகவல்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடமிருந்து அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை மையங்கள் எதுவாக இருந்தாலும் பரீட்சை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான எல்.எம்.டி. தர்மசேன வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here