உணவு சாப்பிட்ட 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி….! அதிர்ச்சியில் பெற்றோர்..!

0

ஸ்கார்பரோவில் Bernice Nantanda என்ற 3 வயது சிறுமி மார்ச் மாத தொடக்கத்தில் காலை உணவுக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி Bernice Nantanda வசித்து வந்த அதே குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த தமது நெருங்கிய தோழியின் குடியிருப்பில் வைத்தே சம்பவத்தன்று காலை உணவு சாப்பிட்டுள்ளார்.

காலை உணவு சாப்பிட்ட இரு குழந்தைகளும் வாந்தி எடுத்த நிலையில் சுருண்டு விழுந்துள்ளனர்.

இதனால் பயத்தில் உறைந்து போன அந்த தாயார் உடனையே Bernice-ன் தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார்.

Bernice-ன் தாயார் Mirembe அந்த குடியிருப்புக்கு செல்லவும், தமது மகள் பரிதாபமாக கிடப்பதைக் கண்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி Bernice Nantanda மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது தோழியான இன்னொரு சிறுமி, நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், 45 வயதான Francis Ngugi என்பவரை கைது செய்துள்ளனர்.

இவரே சிறுமிகள் சாப்பிட்ட காலை உணவில் ரசாயன பொருளை கலந்ததாக தெரிய வந்துள்ளது.

இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here