உணவு உற்பத்தி தொழிற்சாலையில் ரோபோ… எந்த நாட்டில் தெரியுமா..?

0

ஜப்பானில் உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாளர் பற்றாக்குறை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் பற்றாக்குறையை போக்க புதிய ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோசமான பணிச்சூழல் மற்றும் கொரோனாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து உணவு தொழிற்சாலைகளில் வேலை செய்ய பலர் தயக்கம் காட்டுவதால் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் நூடுல்ஸ், சிக்கன், காய்கறிகள் என பலவகையான உணவுகளை நேர்த்தியாக பேக் செய்யும் ரோபோவை யமடோ ஸ்கேல் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

பூட்லீ எனப்படும் 5 அடி உயர ரோபோவை ரூ.90 லட்சம் கோடிக்கு விற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here