உணவகங்களில் உணவு விநியோகம் முடங்கும் அபாயம்….

0

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டள்ளது.

இந்நிலையில் உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது

உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே உள்ளது.

எரிவாயு கலவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிலிண்டர்களின் விநியோகத்தை இடைநிறுத்தினால் மற்றைய வகைக சிலிண்டரை கொண்டு பயன்படுத்தலாம் என வுலியுறுத்தியுள்ளது.

இன்று முதல் உணவக உணவு விநியோகம் முழுமையாக முடங்கிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்கு 20 இடங்களில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 116 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here