உடல் எடையை பராமரிக்க உதவும் கொள்ளு !!

0

உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்கவிரும்புபவர்கள் இரவில் ஒரு பிடி கொள்ளை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து, கொள்ளை அப்படியே அல்லது சுண்டலாக்கி சாப்பிட்டு வந்தாலே நாளடைவில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

கொள்ளை முளைகட்டியும் சாப்பிடலாம். கொள்ளில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடையை அதிகரிக்காது. அதே நேரம் கார்போ ஹைட்ரேட் நிறைந்திருப்பதால் சக்தியும் இருக்கும்.

பருவ வயதுடைய பெண்கள் கொள்ளை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது நல்லது. இதில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் மாதவிடாய் களைப்பை நீக்கும். அதிக இரத்தப்போக்கு உண்டாகும் போது உடலில் இழக்கும் சத்துக்களை ஈடு செய்கிறது.

கொள்ளில் இரும்புச்சத்து உடன் பாஸ்பரஸ், கால்சியம், புரதம் போன்ற சத்துக்களும் உண்டு. விந்து எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் கொள்ளு உணவை சேர்த்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண் மலட்டுத் தன்மையை நீக்கும் பக்கவிளைவில்லாத உணவுபொருள் கொள்ளு.

கொள்ளை ஊறவைத்து அந்த நீரை குடித்தால் உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கற்கள் உண்டாகாமால் இருக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் இவற்றில் இருக்கும் இரும்புச்சத்தும், பாலிபினால் என்னும் வேதிப்பொருள்களும் செயல்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று கால்சியம் ஆக்சலேட் என்னும் சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கரைக்க கொள்ளு உதவுவதாக தெரிவித்திருக்கிறது.

கொள்ளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது உணவில் கொள்ளு சேர்த்து வந்தால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து நீரிழிவு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு நிச்சயம் பலன் தரும்.

கொள்ளு உஷ்ணமிக்க தானியம் என்பதால் எற்கனவே உடல் உஷ்ணம் பெற்றவர்கள் வாரம் இருமுறை உணவில் கொள்ளு சேர்த்து வருவது நல்லது. மழைக் காலங்கள், குளிர் காலங்களில் ஏற்ற உணவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here