உடல்நிலை குறித்து மம்முட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

நடிகர் மம்முட்டி, தற்போது மலையாளத்தில் தனது மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் ‘புழு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.

அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here