உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், லுஹான்ஸ்க் மற்றும் டினிப்ரோ பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் முற்றாக விமான நிலையம் அழிந்துள்ளது.
இந்த தாக்குதலில் ஊழியர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
தீயை அணைக்கும் பணி நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.