உக்ரைனின் இரண்டு பகுதிகளில் ரஷ்யாவின் பாதுகாப்பு இராணுவம் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) மாஸ்கோ நேரப்படி 10:00 மணிக்கு (07:00GMT) உக்ரைனின் மரியுபோல் (Mariupol) மற்றும் வோல்னோவாகா (Volnovakha) நகரங்களில் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நகரங்களை விட்டு வெளியேறுவதற்கு ஒரு அமைதியான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் பாவ்லோ கிரிலென்கோ ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது நிர்வாகம் தற்போது வெளியேற்றம் குறித்த நடவடிக்கைகளை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 10 நாட்கள் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போரில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க அனுமதிப்பதில் இந்த நடவடிக்கை முதல் திருப்புமுனையாகும்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே உக்ரைனில் இருந்து போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.