உக்ரைன் – ரஷ்ய போரின் அச்சுறுத்தல்…. ஜேர்மனியின் அதிரடி நடவடிக்கை

0
Vor Schloss Bellevue.

உக்ரைன் ரஷ்ய போரின் அச்சுறுத்தல் பல நாடுகளையும் பாதிக்கத் தொடங்கியது.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவிக்கையில்,

போர் நடந்தால், உணவு, மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள், முகமூடிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை நாடு சேமிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும், பதுங்கு குழிகளை பலப்படுத்துதல், நிலத்தடி வாகன நிறுத்தம், நிலத்தடி ரயில் நிலையங்களை பாதுகாப்பான தங்குமிடங்களாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் தற்போது 599 பொது புகலிடங்கள் இருப்பதாகவும், அவற்றை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும், ஆனால் நாடு முழுவதும் இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட உள்ளதாகவும் ஃபைசர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here