உக்ரைன் மீதான போர் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு

0

உக்ரைன் மீது தொடர்ந்து 47வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் கீவ் நகருக்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்து உதவி தொகுப்புகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அரச ஊடகத்திற்கு பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov, உக்ரைனுடன் பேச்சுவார்த்தையை தொடராததற்கு எந்த காரணமும் இல்லை.

ஆனால், இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்தாது என திட்டவட்டமாக தெரவித்தார்.

பெப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி புடின் ராணுவ நடவடிக்கையை இடைநிறுத்த உத்தரவிட்டார்.

ஆனால் ரஷ்யாவின் நிலைப்பாடு தற்போது மாறிவிட்டது.

உக்ரேனியர்கள் தாக்குதலை இடைநிறுத்த திட்டமிடவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பியுள்ளோம்.

இறுதி உடன்பாடு எட்டப்படாத வரை, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, ராணுவ நடவடிக்கையில் இடைநிறுத்தப்படாது என Sergei Lavrov தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here