இன்று ஆறாவது நாளாக உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில், கார்கிவ் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவிக்கையில்,
உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும், மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரஷ்ய ஆதரவு நாடான பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் நுழைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.