உக்ரைன் மருத்துவமனைகளை அழிக்கும் ரஷ்யா! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

0

உக்ரைனில் 400 மருத்துவமனைகளை அழித்தது, நோயாளிகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky தனது நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பு நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் புற்றுநோய் மருந்துகள், அறுவை சிகிச்சை செய்யும் திறன் மருத்துவர்கள் முற்றிலுமாக இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள முக்கிய போர்க்களங்களில் பல இடங்களில் அடிப்படை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் (antibiotics) கூட இல்லை.

மார்ச் 9 ஆம் திகதி அன்று, முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள ஒரு மகப்பேறு வசதி கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டது என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், ஆயுதமேந்திய உக்ரேனிய அமைப்புகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டதாக ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா மீது போர்க்குற்றங்கள் இருப்பதாக குற்றம் சாட்டுகிறது.

ஆனால், ரஷ்யா மூலோபாய இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களை அல்ல என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here