பிரான்ஸில் அதிபர் தேர்தல் உக்ரைன் போரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான், தீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லீ பென் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிபர் பதவிக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது.
ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புக் கொண்ட தீவிர வலதுசாரியான மரின் லீ பென் வென்றால் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய முயற்சிகளைக் குறைக்கக்
கூடிய வாய்ப்பு உள்ளது.
மேக்ரான் அரசு உக்ரைனுக்கு 825 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது.
லீ பென் வென்றால் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது நிறுத்தப்படக்கூடும்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதித்ததை ஏற்கெனவே லீ பென் எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனால் ரஷ்யா மீது விதித்துள்ள தடையை நீக்குவதுடன், கிரிமியாவை ரஷ்யாவின் ஒருபகுதியாக அங்கீகரிப்பார் என்றும் கூறப்படுகிறது.