மத்திய கீவ்வில் உள்ள உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாதுகாப்பு உளவுத்துறை தலைமையக கட்டடத்தில் இருந்து கறுப்பு புகை எழுந்துள்ளது.
ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இன்று காலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களால் அதன் இராணுவ கட்டளை மையங்கள் சில தாக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.