உக்ரைன் தலைநகர் கிவ் இல் நேற்றைய தினம் 17 ஆம் திகதி ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்கியை பிரித்தானிய பிரதமர் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் படையினருக்கு, இராணுவ பயிற்சித் திட்டத்தை வழங்க உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போறிஸ் ஜொன்சன் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் பிரித்தானிய பிரதமர் அந்த நாட்டுக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ள பயிற்சித் திட்டத்துக்கமைய, ஒவ்வொரு 120 நாட்களுக்கும், 10 000 துருப்பினருக்கு பயிற்சியளிக்க முடியும் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.