பிரித்தானியாவின் ஆதரவை உக்ரைனுக்கு தெரிவிப்பதற்காக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், போருக்கு மத்தியில் உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளார்.
போர்ச் சூழலில் உக்ரைனுக்குச் சென்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதால் பலன் கிடைக்குமா என்பது குறித்து ஆராயுமாறு போரிஸ் ஜான்சன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், போர் நடக்கும் இடத்துக்கு பிரதமர் செல்ல திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்துள்ளார்கள்
உக்ரைனுக்கு செல்வது சாத்தியமானால், போரிஸ் ஜான்சன் அங்கு செல்லவே விரும்புவதாக நாடாளுமன்ற அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறித்த விடயங்கள் முக்கியம் என்பதை மறுப்பதற்கில்லை.
அவர் சொல்வதை ஆமோதிப்பது போலவே உள்ளது, உக்ரைன் தலைநகர் Kyiv மேயரான Vitali Klitschko காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
முந்தைய நாள் இரவில் Kyiv நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அவர் புகைப்படங்கள் மற்றும் வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
இப்போதைய சூழலில் போரிஸ் ஜான்சன் உக்ரைன் சென்றால், அவரது பாதுகாப்பை உறுதி செய்வது எவ்வளவு என்பதை காட்டும் விதத்தில் அவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


