உக்ரைனுக்கு மேலும் 6,000 எறிகணைகளை வழங்கிய பிரித்தானியா…

0

உக்ரைனுக்கு மேலும் 6,000 எறிகணைகளை பிரித்தானியா வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்ஸன் இன்றைய தினம் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உக்ரைனிய இராணுவத்தினர் மற்றும் விமானிகளுக்கான வேதனத்தை வழங்குவதற்கு 33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் பிரித்தானியாவினால் வழங்கப்படவுள்ளது.

உக்ரைனுக்கு, இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவை அதிகரிப்பதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜன்ஸன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லை எனில், ஐரோப்பா மற்றும் உலக நாடுகளின் சுதந்திரம் பறிக்கப்படும் நிலை உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜன்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்காக உக்ரைன் படைகளுக்கு ஏற்கனவே பிரித்தானியா 4,000 எறிகணைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here