உக்ரைனுக்கு செல்லும் திட்டம் இல்லை…. அமெரிக்கா அதிபர்!

0

உக்ரைனுக்கு செல்வதற்கான எந்த திட்டமும் ஜோ பைடனுக்கு(Joe Biden) இல்லை என வெள்ளை மாளிகை செய்தியாளர் செயலாளர் ஜென் சாகி (Jen Saki)செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பைடனின்(Joe Biden) இந்த பயணம் மிகவும் சிக்கலான பாதுகாப்பு சவாலை முன்வைக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பிடன் நிர்வாகம் அதற்கு பதிலாக ஒரு உயர் பதவியில் இருக்கும் அதிகாரியை அனுப்ப விரும்புவதாகவும் கூறினார்.

“யாராவது சென்றால். யார், எப்போது செல்வார்கள் என்பதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் தெரிவுபடுத்தமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு நேர்காணலில், ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவிக்கையில்,

பைடன்(Joe Biden) வருவார் என்று நான் நினைக்கிறேன், “ஆனால் அது நிச்சயமாக அவருடைய முடிவு மற்றும் பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தது” என்றார்.

அவர் அமெரிக்காவின் தலைவர்.

அதனால் அவர் இங்கு வந்து பார்க்க வேண்டும். என்று கூறினார்.

“இரண்டு அதிபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சந்திப்பு, உக்ரைனுக்கான புதிய பொருட்கள், அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் இந்த மோதலின் சாத்தியமான அரசியல் தீர்வு பற்றிய விவாதங்களுக்கு வழி வகுக்கும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here