உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப தாங்கள் தயாராக இல்லை என ஹங்கேரி அறிவித்துள்ளது.
குறித்த தகவலை ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto புதன்கிழமை அறிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவு ஹங்கேரி, தெரிவித்துள்ளது.
ஹங்கேரி ஊடாக ஆபத்தான ஆயுதங்களை உக்ரைனுக்கு கொண்டு செல்வதையும் தடை செய்துள்ளது.
மேலும், அண்டை நாடான உக்ரைனில் இருந்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களின் ஊடுருவலைத் தடுக்க ஹங்கேரி தனது கிழக்கு எல்லைகளில் கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.
மேலும் தங்கள் குடிமக்களை பாதுகாப்பது தங்களின் பொறுப்பு என தெரிவித்துள்ள ஹங்கேரி, உக்ரைனின் மேற்கில் வாழும் ஹங்கேரிய பூர்வக்குடி இனத்தவர்கள் கைகளில் ஆயுதங்கள் சிக்க வாய்ப்புள்ளது.
அது ஹங்கேரி நாட்டுக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளதாக அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியஸ்தம் ஏற்க ஹங்கேரி தயார் எனவும் அறிவித்துள்ளது.