உக்ரைனில் ரஷ்ய வீரர்களால் ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி….

0

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து ரஷ்ய வீரர்கள் பின் வாங்கியதில் இருந்து பயங்கரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்கிவ் பகுதியை உக்ரைன் போராடி மீட்டுள்ளனர்.

இந்நிலையில், கிராமம், நகரம் என சிதறுண்டிருந்த ரஷ்ய துருப்புகள் மீண்டும் ஒன்றுதிரண்டுள்ளனர்.

பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உட்பட, அவர்கள் வெளியேறிய பின் இவ்வாறான தகவல் வெளியாகியுள்ளன.

ஒரு மணி நேரத்தில், 8 சிறார்கள் உட்பட 10 வன்கொடுமை குற்றங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகத்தில் இதனை வியாழக்கிழமை பதிவு செய்துள்ளார்.

அதே வேளை, முந்தைய நாள் 56 வழக்குகள் பதிவாகியுள்ளது.

ரஷ்ய வீரர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 8 சிறார்களில் இருவர் 10 வயது ஆண் பிள்ளைகள் எனவும், 1 வயது குழந்தை ஒன்று காயங்களால் மரணமடைந்துள்ளது.

குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கார்கிவ் பகுதியில் நடந்தேறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனிடையே, பாலியல் புகார் தொடர்பில் ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் தரப்பு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஐந்து ரஷ்ய வீரர்களால் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான 14 வயது சிறுமி ஒருவர் கருவுற்றிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here