உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தைில் தீ பரவல்… பீதியடைந்த மக்கள்

0

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலுக்குப் பின்னர் இன்று அதிகாலை தீப்பிடித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு மில்லியன் அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி வெளியேறியுள்ளனர்.

ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளில் பரந்த மோதலின் அச்சம் ஆகியவற்றை உருவாக்கி, ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைன் படைகளுக்கும் ரஷ்ய துருப்புக்களுக்கும் இடையே கடுமையான சண்டை இடம்பெற்று வருகின்றது.

ரஷ்ய துருப்புக்கள் ஆலையைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டதாகவும், இராணுவ டாங்கிகளுடன் நகரத்திற்குள் நுழைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக உக்ரைனின் தலைநகரான கியேவில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள செயலிழந்த செர்னோபில் ஆலையை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here