உக்ரைனில் இருந்து வெளியேறும் ரஷ்ய தூதர்கள்…

0

உக்ரைனில் உள்ள அனைத்து தூதரக ஊழியர்களையும் ரஷ்யா வெளியேற்ற ஆரம்பித்துள்ளது.

உக்ரைனின் Odessa நகரில் உள்ள தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை ரஷ்யக் கொடிகள் அகற்றப்பட்டுள்ளது.

காலை தூதரகத்தை விட்டு பல கார்கள் வெளியேறியதாக என Odessa நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் பணியில் இருந்த உக்ரேனிய தேசிய காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக உக்ரைனில் இருந்து தூதரக ஊழியர்களை வெளியேற்றுவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரித்ததற்காக ரஷ்யாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here