உக்ரைனில் அமுல்படுத்தப்பட்ட அவசர நிலை…

0

ரஷ்யாவுடன் போர் ஏற்படும் அபாயம் உள்ளதால் உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி Oleksiy Danilov புதன் கிழமை தெரிவிக்கையில்,

2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைனிலிருந்து பிரிந்து இருக்கும் Donetsk மற்றும் Luhansk பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும்

அவசரகால நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskiy அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கவில்லை என்றும் Danilov கூறினார்.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் 2014 முதல் Donetsk மற்றும் Luhansk பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

Donetsk மற்றும் Luhansk இரண்டையும் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ள ரஷ்யா, இரண்டு பிராந்தியங்களிலும் அமைதியை நிலைநாட்ட அதன் படைகளை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here