உக்ரைனிலிருந்து மீட்க்கப்பட்ட இலங்கை மாணவர்கள்

0

ரஷ்ய உக்ரைன் போர் 200 நாட்களையும் கடந்து இடம்பெறுகின்றது.

கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த உக்ரைனில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியின் 7 இலங்கை மாணவர்கள் கார்கிவ் பிராந்தியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் இருந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் கட்டடம் ஒன்றில் அடித்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில் பொதுமக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட சித்திரவதை அறைகள் மற்றும் வளாகங்களும் உக்ரைய்ன் படையினரால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here